நிரந்தர மதுவிலக்கு அறிவிப்பீர்கள் என எதிர்பார்த்தேன் அய்யா: இயக்குநர் சேரன்

நிரந்தர மதுவிலக்கு அறிவிப்பீர்கள் என எதிர்பார்த்தேன் அய்யா: இயக்குநர் சேரன்
Updated on
1 min read

நிரந்தர மதுவிலக்கு அறிவிப்பீர்கள் என எதிர்பார்த்தேன் அய்யா என்று தமிழக முதல்வரின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கரோனா அச்சுறுத்தல் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே நாளை (மே 7) டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவித்துள்ளது தமிழக அரசு.

இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். டாஸ்மாக் திறப்பு அறிவிப்பு தொடர்பாக இயக்குநர் சேரன் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

(தமிழக முதல்வரின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு) "நிரந்தர மதுவிலக்கு அறிவிப்பீர்கள் என எதிர்பார்த்தேன் அய்யா.. இதைவிட மதுவிலக்கு அமல்படுத்த வேறு வாய்ப்பு கிடைக்காது. மீண்டும் உங்கள் ஆட்சி உருவாக்க இது ஒரு பெரும் ஆயுதமாக மாறியிருக்கும். அரசிற்கான வருமானம் என்பதைவிட பெரும்பாலான மக்களின் உயிர்காப்பதல்லவா முக்கியம்"

இவ்வாறு இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in