பசிக்கு தடுப்பூசி கண்டுபிடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும்: விஜய் சேதுபதி

பசிக்கு தடுப்பூசி கண்டுபிடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும்: விஜய் சேதுபதி
Updated on
1 min read

பசிக்கு தடுப்பூசி கண்டுபிடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும் என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் எந்தவொரு படப்பிடிப்புமே நடைபெறவில்லை. இதனால் பிரபலங்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். இந்த அச்சுறுத்தலால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பைக் கருத்தில்கொண்டு பலரும் நிவாரண உதவி அளித்து வருகிறார்கள்.

மேலும், பசியால் வாடும் மக்களுக்காக பல்வேறு வகையில் மாநில அரசுகள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் எனப் பலரும்உதவிகள் செய்து வருகிறார்கள். சமீபமாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் எந்தவொரு கருத்தையுமே வெளியிடாமலேயே இருந்தார் விஜய் சேதுபதி. வெறும் படத்தின் ட்ரெய்லர், ஃபர்ஸ்ட் லுக் போன்றவற்றை மட்டுமே வெளியிட்டு வந்தார்.

தற்போது கரோனா அச்சுறுத்தலில், பசியால் வாடும் மக்கள் தொடர்பாக விஜய் சேதுபதி தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:

"பசி என்றொரு நோய் இருக்கு... அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும்... ஓ மை கடவுளே!!!"

இவ்வாறு விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in