முழுக்க முழுக்க ஐபோனில் எடுக்கப்பட்ட படம்: ‘லாக்டவுன்’ குறித்து ஆண்ட்ரியா தகவல்

முழுக்க முழுக்க ஐபோனில் எடுக்கப்பட்ட படம்: ‘லாக்டவுன்’ குறித்து ஆண்ட்ரியா தகவல்
Updated on
1 min read

ஆதவ் கண்ணதாசன் இயக்கத்தில் ‘லாக்டவுன்’ எனும் குறும்படம் வெளியாகவுள்ளது. இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளார்.

இக்குறும்படம் குறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் ஆண்ட்ரியா கூறியுள்ளதாவது:

''ஆதவ் கண்ணதாசனை எனக்கு ஓராண்டுக்கும் மேலாகத் தெரியும். அவரிடம் நடிப்பை விட எழுத்தில் கவனம் செலுத்துமாறு நான் சொல்லிக் கொண்டே இருப்பேன். அதில்தான் அவரது உண்மையான திறமை இருக்கிறது.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட ஆரம்ப நாட்களில் இந்தக் குறும்படம் குறித்து என்னிடம் ஆதவ் சொன்னார். ஆனால், அப்போது நான் சமையலில் பிஸியாக இருந்தேன். ஒருவழியாக இப்போதுதான் இதற்கான நேரம் வந்தது. இதற்கான முழுக் காரணமும் ஆதவ் மட்டுமே.

இப்படத்தின் சிறப்பம்சமே இது முழுக்க முழுக்க ஐபோனில் எடுக்கப்பட்டது. இதைச் செய்ய வேண்டுமென்று நான் நீண்ட நாட்களாக விரும்பினேன். ஆனால், தரம் குறித்த விஷயங்களில் நாம் சமரசம் செய்யமுடியாது என்பதால் அது கைகூடவில்லை.

ஆனால் இப்போது நமக்கு வேறு வழியில்லை. எனவே இதை ஐபோனில் படம்பிடிக்க முடிவு செய்தோம். ஆனால் எதிர்பார்த்ததை விட சிறப்பாக வந்திருக்கிறது. இப்போது நடந்துகொண்டிருக்கும் விஷயத்தைப் பொழுதுபோக்கு அம்சங்களுடன் சொல்ல முயற்சி செய்திருக்கிறோம்''.

இவ்வாறு ஆண்ட்ரியா கூறியுள்ளார்.

முழுக்க முழுக்க ஐபோனில் எடுக்கப்பட்டுள்ள இக்குறும்படம் நாளை (29.04.20) வெளியாகவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in