

மணிரத்னம் இயக்கவிருக்கும் படத்தின் ஒளிப்பதிவாளராக ரவிவர்மன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
'ஓ காதல் கண்மணி' படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் தனது படத்தின் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். மெட்ராஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் இப்படத்தின் நாயகர்களாக கார்த்தி மற்றும் துல்கர் சல்மான் இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார். மற்றொரு நாயகியாக புதுமுகம் ஒருவரை நடிக்க வைக்கலாம் என்று ஆலோசனையில் இறங்கி இருக்கிறது படக்குழு.
எப்போதுமே பி.சி.ஸ்ரீராம், சந்தோஷ் சிவன் போன்ற முன்னணி ஒளிப்பதிவாளர்கள் தான் மணிரத்னம் படத்துக்கு ஒளிப்பதிவு செய்வார்கள். இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ரவிவர்மன் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.
நவம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு துவங்க திட்டமிட்டு இருக்கிறார் மணிரத்னம். அதற்குள் முதற்கட்ட பணிகள் முடித்துவிட தீவிரம் காட்டிவருகிறார்கள். 2016 கோடை விடுமுறைக்கு வெளியிட திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.