திருமணத்தில் பிரச்சினை என வதந்தி: சூசகமாகப் பதிலளித்த ஸ்வாதி 

திருமணத்தில் பிரச்சினை என வதந்தி: சூசகமாகப் பதிலளித்த ஸ்வாதி 
Updated on
1 min read

நடிகை ஸ்வாதி ரெட்டி தன் திருமணத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதைச் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

தமிழில் 'சுப்பரமணியபுரம்', 'வடகறி' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ஸ்வாதி ரெட்டி. ஆகஸ்ட் 2018ல் இவர் மலேசியன் ஏர்லைன்ஸைச் சேர்ந்த விமான ஓட்டி விகாஸ் வாசு என்பவரை மணந்தார். தனது சமூக வலைதள பக்கங்களில் அவ்வப்போது புகைப்படங்களைப் பகிர்ந்து வந்தார் ஸ்வாதி.

ஆனால் சமீபத்தில் தனது கணவருடன் தான் இருக்கும் அனைத்து புகைப்படங்களையும் ஸ்வாதி தனது பக்கத்திலிருந்து நீக்கினார். இதனால் அவரது திருமணத்தில் பிரச்சினை இருப்பதாக சில யூகங்கள் கிளம்பின.

ஆனால் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ள ஸ்வாதி, இந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தனது மொபைலில் இருக்கும் ஒரு ஃபோல்டரில் தன் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் பத்திரமாக வைத்திருக்கிறார். அதை இந்த வீடியோவின் மூலம் அவர் பகிர்ந்துள்ளார். மேலும் 2012-ஆம் வருடத்திலிருந்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த படங்கள் இது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோவுக்கு பின்னணியில் ஹாரி பாட்டர் படத்தின் இசையைச் சேர்த்திருக்கிறார். அந்தக் கதையில் ரகசிய அறையைப் பற்றிய ஒரு உரையாடலையும் தனது பகிர்வில் குறிப்பிட்டிருக்கிறார். தன் மொபைலில் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களைப் பற்றித்தான் ரகசிய அறை என்று அவர் சூசகமாகக் குறிப்பிட்டிருப்பதாகத் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in