எனக்குப் பிடித்த நடிகர்களில் ஒருவர் விஜய்: நமல் ராஜபக்ச

எனக்குப் பிடித்த நடிகர்களில் ஒருவர் விஜய்: நமல் ராஜபக்ச
Updated on
1 min read

எனக்குப் பிடித்த நடிகர்களில் ஒருவர் விஜய் என்று ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஊரடங்கு அமலில் இருப்பது போல், இலங்கையிலும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. அங்கும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை இலங்கை அரசு எடுத்து வருகிறது.

சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில், இலங்கையில் ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்சவும் வென்று நாடாளுமன்றத்தில் எம்.பி ஆக இருக்கிறார். எப்போது ட்விட்டர் தளத்தில் இடைவிடாது பணிபுரியும் நமல் ராஜபக்ச, தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னை பின்தொடர்பவர்களுக்குச் சவால்கள் விடுத்துப் போட்டி நடத்தி வருகிறார்.

#7DayChallenge, #homegardenChallenge என பல சவால்கள் விடுத்து, அதில் வரும் புகைப்படங்களை ரீ-ட்வீட் செய்து, பொதுமக்கள் வீட்டிலேயே இருப்பதை ஊக்கப்படுத்தி வருகிறார். இதில் #7DayChallenge சவாலில் இறுதியான 7-ம் நாளில் 'பிகில்' படம் பார்ப்பது போல் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து நமல் ராஜபக்ச கூறியிருப்பதாவது:

"7 நாள் சவாலில் இறுதி நாள். பெரும்பாலும் வீட்டில் ஓய்வெடுக்கிறேன். எனக்கு என்று பிடித்த நடிகர்களில் ஒருவரான விஜயின் 'பிகில்' படத்தை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். எனக்குப் பிடித்தமான அந்தப் படத்தை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருக்கும்போது மனைவி லிமினி என்னை கையும் களவுமாகப் பிடித்துவிட்டார்"

இவ்வாறு நமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in