உன்னை மிஸ் செய்கிறேன் நந்தனா: பாடகி சித்ரா உருக்கம்

உன்னை மிஸ் செய்கிறேன் நந்தனா: பாடகி சித்ரா உருக்கம்
Updated on
1 min read

உன்னை மிஸ் செய்கிறேன் நந்தனா என்று பாடகி சித்ரா உருக்கமாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்திய இசையுலகில் அனைவராலும் அறியப்பட்டவர் பாடகி சித்ரா. இவருடைய குரலை வைத்தே, சித்ரா பாடியிருக்கிறார் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இவருடைய குரல் மிகவும் பரிச்சயம். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, பெங்காலி, ஒரியா, பஞ்சாலி, குஜராத்தி என அனைத்து மொழிகளிலுமே இவர் பாடியுள்ளார்.

மிகவும் பிரபலமான சித்ராவின் ஒரே மகள் நந்தனா. ஆட்டிசம் பாதித்த தனது மகளை எந்தவொரு நிகழ்ச்சிக்குச் சென்றாலும் கூடவே அழைத்துச் செல்வார். 2011-ம் ஆண்டு துபாயில் இசை நிகழ்ச்சிக்காகச் சென்றிருந்தபோது அங்கு நந்தனா இறந்தார். அந்தச் சமயத்தில் ஒட்டுமொத்தத் திரையுலகினரும் சித்ராவுக்கு தங்களுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர்.

தற்போது தனது மகளின் நினைவு தினத்தை முன்னிட்டு ஃபேஸ்புக் பதிவில் சித்ரா பதிவிட்டு இருப்பதாவது:

"ஒவ்வொரு பிறப்புக்கும் ஒரு காரணம் உண்டு என்றும் அந்தக் காரணம் முடிந்த பின் மறு உலகத்துக்குச் செல்வோம் என்றும் மக்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். காலம் சிறந்த மருந்து என்றும் சொல்வார்கள். ஆனால் கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்குத்தான் தெரியும் அது உண்மையில்லை என்று.. காயம் இன்னும் அப்படியே வலியுடன் இருக்கிறது.. உன்னை மிஸ் செய்கிறேன் நந்தனா".

இவ்வாறு சித்ரா பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in