

இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் படத்துக்கு 'கபாலி' என்ற தலைப்பு வைக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ராதிகா ஆப்தே, கலையரசன், பிரகாஷ்ராஜ், தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடிக்கவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இப்படத்தை தாணு தயாரிக்கவிருக்கிறார்.
'காளி' என்ற தலைப்புக்கு ரஜினி சம்மதம் தெரிவிக்காததால், 'கபாலி' என்ற தலைப்பு பரிசீலனையில் இருக்கிறது. பல்வேறு தலைப்புகள் இருந்தும் 'கபாலி' தலைப்பு சரியாக இருக்கும் என்று படக்குழு ஆலோசனையில் இருக்கிறது. ஏனென்றால் இப்படத்தில் ரஜினி பாத்திரத்தின் பெயர் 'கபாலீஸ்வரன்'.
விநாயகர் சதுர்த்தி அன்று படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். மலேசியாவில் தொடர்ச்சியாக 60 நாள் படப்பிடிப்பு நடத்துவதற்கான ஆயுத்த பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.