எம்.ஆர்.ராதா ஒரு ராக்ஸ்டார் - தந்தையை நினைவுகூர்ந்த ராதிகா

எம்.ஆர்.ராதா ஒரு ராக்ஸ்டார் - தந்தையை நினைவுகூர்ந்த ராதிகா
Updated on
1 min read

தன் தந்தை எம்.ஆர்.ராதாவை பற்றி நினைவு கூர்ந்துள்ளார் நடிகை ராதிகா.

தனது கருத்துக்களை பொதுவெளியில் தயக்கமின்றி துணிவுடன் பேசியவர் மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதா. திரைப்படங்களில் அவர் பேசிய அரசியல் வசனங்கள் இன்றைய அரசியல் சூழலுக்கு பொருந்திப் போவதை காணலாம். வாட்ஸ்- அப், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் எம்.ஆர்.ராதாவின் பேச்சுக்கள், மீம்ஸ் அவ்வப்போது வைரலாவது வழக்கம்.

கடந்த ஏப்ரல் 14ஆம் தேதியன்று எம்.ஆர்.ராதாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அவரது மகளும் நடிகையுமான ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் எம்.ஆர்.ராதாவைப் பற்றிய ஒரு சம்பவத்தை நினைவுக் கூர்ந்திருந்தார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் ராதிகா கூறியிருப்பதாவது:

ஒரு ராக்ஸ்டாரின் பிறந்தநாள். தன் வாழ்க்கையை கொள்கையுடன் வாழ்ந்தவர் எம்.ஆர்.ராதா. ஒரு வழக்கறிஞர் எழுதியிருந்ததை படிக்க நேர்ந்தது. வழக்கறிஞர்கள் அவரிடம் நீதிமன்றத்தில் ஒரு சிறிய பொய்யைச் சொல்லுமாறு வேண்டுகோள் வைத்துள்ளனர். அதற்கு அவர் சிரித்துக் கொண்டே, ‘என் வாழ்க்கை முழுவதும் நான் செய்யாத ஒரு விசயத்தை செய்யுமாறு என்னிடம் சொல்லாதீர்கள், என்ன நடந்தாலும் சரி’ என்று கூறினாராம். வாவ், என்ன ஒரு நம்பிக்கை.

இவ்வாறு ராதிகா கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in