கரோனா அறிகுறி: ஸ்ரேயாவின் கணவருக்கு சிகிச்சையளிக்க மறுத்த மருத்துவமனை

கரோனா அறிகுறி: ஸ்ரேயாவின் கணவருக்கு சிகிச்சையளிக்க மறுத்த மருத்துவமனை
Updated on
1 min read

கரோனா அறிகுறியுடன் சிகிச்சைக்கு சென்ற ஸ்ரேயாவின் கணவருக்கு ஸ்பெயினில் உள்ள ஒரு மருத்துவமனை சிகிச்சையளிக்க மறுத்து திருப்பி அனுப்பிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா நகரத்தில் தனது கணவர் ஆண்ட்ரே கொஸ்சீவுடன் வசித்து வருகிறார் நடிகை ஸ்ரேயா. தனது கணவருக்கு கரோனா வைரஸ் அறிகுறி இருப்பதை அறிந்த ஸ்ரேயா அவரை அருகிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அங்குள்ள மருத்துவர்கள் ஆண்ட்ரேவுக்கு கரோனா இல்லையென்றாலும் இங்கு தங்கியிருந்தால் கரோனா தொற்று ஏற்பட்டு விடும் எனவே அவரை இங்கிருந்து அழைத்துச் சென்றுவிடுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து ஸ்ரேயா தனது கணவரை அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளார். இருவரும் சுயதனிமைப்படுத்தலை கடைபிடித்து, வீட்டிலேயே இருந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள முடிவு செய்துள்ளனர். தற்போது ஸ்ரேயாவின் கணவர் ஆண்ட்ரே கொஸ்சீவ் கரோனா அறிகுறிகளில் இருந்து குணமடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 19,25,384 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,19,718 பேர் கரோனா தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in