

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பெரும் வரவேற்பு பெற்ற 'மெமரீஸ்' திரைப்படம், தமிழில் அறிவழகன் - அருள்நிதி இணைப்பில் ரீமேக்காகிறது.
'ஈரம்', 'வல்லினம்' போன்ற வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் அறிவழகன். 'வல்லினம்' படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.
ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் அருள்நிதி நாயகனாக நடிக்க ஓப்பந்தமாகி இருக்கிறார். அக்டோபர் மாதம் படப்பிடிப்பு துவங்கி டிசம்பரில் முடிக்க திட்டமிட்டு இருக்கிறது படக்குழு. நாயகி மற்றும் படக்குழுவினர் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.
இப்படம் மலையாளத்தில் பெரும் வரவேற்பு பெற்ற 'மெமரீஸ்' படத்தின் ரீமேக்காகும். ப்ருத்வி ராஜ் நடித்திருந்த இப்படத்தை ஜீத்து ஜோசப் இயக்கி இருந்தார். ஏற்கனவே ஜீத்து ஜோசப் இயக்கிய 'த்ரிஷ்யம்' படம் தமிழில் 'பாபநாசம்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.