

பிரபு சாலமன் இயக்கிவரும் படத்தில் நடித்துவிட்டு, துரை.செந்தில்குமார் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் தனுஷ்.
பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு படுதீவிரமாக நடைபெற்று வருகிறது. கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து வரும் இப்படத்தை சத்ய ஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் 'சூதாடி' படத்தில் நடிக்க திட்டமிட்டார் தனுஷ். ஆனால், அப்படத்தின் முதற்கட்ட பணிகள் இன்னும் முடிவடையாத காரணத்தால் படப்பிடிப்பும் தள்ளிப் போகிறது.
அப்படம் தொடங்கும் முன்பு குறுகிய கால தயாரிப்பாக துரை.செந்தில்குமார் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் தனுஷ். ஏற்கனவே தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்த 'எதிர் நீச்சல்', 'காக்கி சட்டை' ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தனுஷ் தயாரிப்பிலேயே அவர் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் துரை.செந்தில்குமார். இப்படத்தை முடித்துவிட்டு வெற்றிமாறன் படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் தனுஷ்.