

மணிரத்னம் வெட்கப்பட்டு இப்போதுதான் பார்க்கிறேன் என்று ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பதிவில் கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.
எப்போதுமே தனது ட்விட்டர் தளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளைத் தெரிவிப்பவர் இயக்குநர் ராம் கோபால் வர்மா. ரஜினி, பவன் கல்யாண், சந்திரசேகர் ராவ் உள்ளிட்ட பல்வேறு ஆளுமைகள் குறித்து பல்வேறு சமயங்களில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பிரதமரின் விளக்கு ஏற்றும் வேண்டுகோள் அன்றைக்குக் கூட 9 மணியளவில் இருட்டில் சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்து அந்த வீடியோவை ட்விட்டரில் பதிவேற்றினார். இன்று (ஏப்ரல் 7) அவரது பிறந்த நாளாகும். இதனால் பலரும் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
தற்போது, மணிரத்னம் - அதிதி ராவ் இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து தனது ட்விட்டர் பதிவில் ராம் கோபால் வர்மா, "எப்போதும் மிகத் தீவிரமாக இருக்கும் மணிரத்னம் முதல் முறையாக வெட்கப்பட்டு நான் பார்த்தது இப்போதுதான்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.