அக்டோபர் 1-ம் தேதி வெளியாகிறது புலி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அக்டோபர் 1-ம் தேதி வெளியாகிறது புலி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Updated on
1 min read

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் 'புலி' அக்டோபர் 1ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ரீதேவி, சுதீப், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், பிரபு, நந்திதா உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி வரும் படம் 'புலி'. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு நட்டி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பி.டி.செல்வகுமார் மற்றும் ஷிபு தமீன்ஸ் இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகி வரும் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தின் ட்ரெய்லரை 20 மணி நேரத்தில் 10 லட்சம் பேர் பார்த்து ரசித்து சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 17ம் தேதி இப்படம் வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பில் கூறப்பட்டு வந்தாலும், சென்சார் பணிகள் முடிந்தவுடன் முறைப்படி அறிவிக்க இருந்தார்கள்.

இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் எஸ்.கே.டி ஸ்டூடியோஸ் ட்விட்டர் தளத்தில் "அக்டோபர் 1ம் தேதி 'புலி' வெளியாகும்" என்று அறிவித்திருக்கிறார்கள்.

ஏன் இந்த ஒத்திவைப்பு என்று படக்குழுவினரிடம் விசாரித்த போது, "படத்தில் அதிகமான கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கிறது. அக்காட்சிகள் சரியாக முடிக்க இன்னும் அதிகப்படியான நேரம் தேவைப்படுவதால் தான் ஒத்தி வைத்திருக்கிறோம்" என்று தெரிவித்தார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in