பிரதமரின் வேண்டுகோளை நிராகரிக்கிறேன்: கரு.பழனியப்பன்

பிரதமரின் வேண்டுகோளை நிராகரிக்கிறேன்: கரு.பழனியப்பன்
Updated on
1 min read

பிரதமரின் வேண்டுகோளை நிராகரிப்பதாக இயக்குநர் கரு.பழனியப்பன் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 485-ஆக உயர்ந்துள்ளது. 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருப்பதால், மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வருகிறார்கள்.

இதனிடையே பிரதமர் மோடி ஏப்ரல் 3-ம் தேதி நாட்டு மக்களுக்கு வீடியோ பதிவு மூலம் உரையாற்றினார். ஊரடங்கில் மக்களின் ஒற்றுமையைப் பாராட்டிய பிரதமர் மோடி, அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு விளக்குகள் அனைத்தையும் 9 நிமிடங்கள் அணைத்துவிட்டு விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச் லைட் அல்லது செல்போன் லைட் ஏதாவது ஒன்றை ஒளிர விடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இவரது வேண்டுகோளுக்கு சமூகவலைதளத்தில் தமிழ் பயனர்கள் பலரும் தமிழ் படங்களில் உள்ள காட்சிகளின் புகைப்படத்தை வைத்து மீம்ஸ்களையும் பரவவிட்டு வருகிறார்கள்.

தற்போது, பிரதமரின் இந்த வேண்டுகோளை நிராகரிப்பதாக இயக்குநர் கரு.பழனியப்பன் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

”இந்திய ஒன்றியத்தின் பிரதமர் திரு. மோடியின் விளக்கணைக்கும் வேண்டுகோளை நான் நிராகரிக்கிறேன் ! நீங்க..? இரண்டு வைரஸ்களையும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் துணை கொண்டு வெல்வோம்"

இவ்வாறு இயக்குநர் கரு.பழனியப்பன் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in