மீண்டும் 'மெட்டி ஒலி' ஒளிபரப்பு: சன் டிவி அறிவிப்பு

மீண்டும் 'மெட்டி ஒலி' ஒளிபரப்பு: சன் டிவி அறிவிப்பு
Updated on
1 min read

மிகவும் பிரபலமான 'மெட்டி ஒலி' தொடர் மீண்டும் ஒளிபரப்பாகும் என்று சன் டிவி அறிவித்துள்ளது.

கரோனா வைரஸை கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதனால், இந்தியா முழுக்கவே எந்தவொரு படம், சீரியல் உள்ளிட்ட படப்பிடிப்புகள் நடத்தப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்டுள்ள தினசரி தொழிலாளர்களுக்கு திரையுலகப் பிரபலங்கள் மற்று தொழிலாளர்கள் சங்கம் ஆகியவை உதவிகள் செய்து வருகிறது.

எந்தவொரு படப்பிடிப்பும் நடைபெறாத காரணத்தால், தொலைக்காட்சியில் சீரியல் ஒளிபரப்புகள் கடும் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறது. பல்வேறு சீரியல்கள் ஒரு கட்டத்துக்கு மேல் படப்பிடிப்பு நடத்தப்படாததால் அப்படியே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், தங்களுடைய தொலைக்காட்சியில் முன்னதாக ஹிட்டடித்த நிகழ்ச்சிகள், சீரியல்களை மீண்டும் ஒளிபரப்ப தொடங்கியுள்ளனர்.

டிடி தொலைக்காட்சியில் 'ராமாயணம்', 'சக்திமான்', 'சாணக்யா' ஆகிய தொடர்கள் மீண்டும் ஒளிபரப்பத் தொடங்கியுள்ளன. அதே போல் விஜய் டிவியில் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி, 'சின்ன தம்பி' ஆகியவை மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

இதே போல் சன் டிவியில் தமிழக இல்லத்தரசிகள் மத்தியில் மிகவும் பிரபலமான 'மெட்டி ஒலி' சீரியல் மீண்டும் ஒளிபரப்படவுள்ளது. இதனை சன் டிவி தங்களுடைய ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளது. மதியம் 1 மணியளவில் 'மெட்டி ஒலி' தொடரும், 3 மணியளவில் ரம்யா கிருஷ்ணன் நடித்த 'தங்கம்' தொடரும் ஒளிபரப்பாகும் என்று அறிவித்துள்ளது. இதனால் சீரியல் ரசிகைகள் மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in