

தற்போதுள்ள சூழலை மனதில் கொண்டு, கவிதை ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன்
தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழக அரசு. பிரதமர் மோடி அறிவித்துள்ள 21 நாட்கள் ஊரடங்கை தமிழகத்தில் தீவிரமாகக் கடைப்பிடித்து வருகிறார்கள். மக்கள் அனைவருமே வீட்டிற்குள்ளே இருக்கிறார்கள்.
இதனிடையே தற்போதுள்ள சூழலை மனதில் கொண்டு கவிதை ஒன்றை எழுதி, தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார் கமல். அந்த கவிதை இதோ:
வாழ்க்கை கற்பிக்காததை சாவா கற்பிக்கும்?
ஏழ்மை கற்பிக்காததை இறைவனா கற்பிப்பான்?
ரோகம் கற்பிக்காததை மோகமா கற்பிக்கும்?
தாகம் கற்பிக்காததை தடாகமா கற்பிக்கும்?
வாழ்...
ஏழ்மை இழிவன்று
அது செல்வத்தின் முதல் படி.
தாகத்துடன் நட, தடாகம் தென்படும்
மோகமும், சாவதும், இறைவனும் இன்றியமையாததன்று
போவதும், வருவதும் போக்குவரத்தன்றி
வேறென்ன சொல்லு
தோழா/தோழி