வீட்டிலேயே இருந்தால் வைரஸிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்: யோகி பாபு

வீட்டிலேயே இருந்தால் வைரஸிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்: யோகி பாபு
Updated on
1 min read

வீட்டிலேயே இருந்தால், இந்த வைரஸிலிருந்து அனைவருமே தப்பித்துக் கொள்ளலாம் என்று யோகி பாபு வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் பரவும் வேகம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா வைரஸுக்கு 900-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கரோனா வைரஸ் பரவும் தீவிரத்தை அறிந்த பிரதமர் மோடி, 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மக்கள், திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர்.

இதனிடையே பொதுமக்களும் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு திரையுலகப் பிரபலங்கள் வேண்டுகோள் விடுத்து வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள்.

இது தொடர்பாக யோகி பாபு வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

"இந்த வைரஸிலிருந்து நாம் அனைவரும் தப்பிக்க வேண்டும் என்றால், நம்ம பிரதமர், தமிழக முதல்வர் சொன்னமாதிரி வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும். பல இடங்களில் இந்த வைரஸால் நிறைய உயிர் பலி நடந்திருக்கிறது. இனி ஒரு உயிர் கூட இதனால் போகக் கூடாது. அதற்கு நாம் அனைவருமே அரசாங்கம் சொல்லும் விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.

நாம் அனைவரும் வீட்டிலேயே இருந்தால், இந்த வைரஸிலிருந்து அனைவருமே தப்பித்துக் கொள்ளலாம். நான் வணங்குகின்ற முருகப் பெருமான் கண்டிப்பாக நம்ம அனைவரையும் இந்த வைரஸிடமிருந்து காப்பாற்றுவார். அனைத்து தெய்வங்களும் இணைந்து நம்மைக் காப்பாற்றும். தெய்வங்களையும் வணங்குவோம். நன்றி".

இவ்வாறு யோகி பாபு தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in