

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் சுதீப் நடிக்கவிருக்கும் படத்தில் நடிகர் சதீஷ் முக்கிய பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
'லிங்கா' படத்தைத் தொடர்ந்து சுதீப் நடிக்க இருக்கும் படத்தின் பணிகளைத் தொடங்க திட்டமிட்டு வந்தார் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார்.
முதற்கட்ட பணிகள் முடிக்கப்பட்டு, சுதீப் உடன் நடிக்கவிருக்கும் நடிகர், நடிகைகள் ஒப்பந்தம் செய்யப்பட்டு வந்தார்கள். இப்படத்தில் தனுஷ், சிவகார்த்திகேயன், அனிருத் உள்ளிட்டவர்களின் நெருங்கிய நண்பர் சதீஷ், சுதீப் உடன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 10ம் தேதி முதல் தொடங்க இருப்பதாக நடிகர் சுதீப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.