விஜய் சேதுபதியின் நானும் ரவுடிதான் அக்.2-ல் ரிலீஸ்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்திருக்கும் 'நானும் ரவுடிதான்' திரைப்படம் அக்டோபர் 2ம் தேதி வெளியாகிறது.
தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன், ராதிகா, ஆர்ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடிக்க தொடங்கப்பட்ட படம் 'நானும் ரவுடிதான்'. அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை 'போடா போடி' இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார்.
'நானும் ரவுடிதான்' படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வந்தன. படத்தின் இசை வெளியீடு, எப்போது வெளியீடு என்பது வெளியிடாமல் இருந்தார்கள். இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் "அக்டோபர் 2ம் தேதி 'நானும் ரவுடிதான்' படத்தை வெளியிடுவது என்று உறுதி செய்திருக்கிறோம். மேலும், படத்தின் பர்ஸ்ட் லுக், டீஸர், பாடல்கள் விரைவில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
