

முறையில்லாமல் திரைப்பட பதிவேற்ற தளங்களையும் தடை செய்ய வேண்டும் என்று விஷால் கோரிக்கை விடுத்துள்ளார்.
நடிகர்களில் தொடர்ச்சியாக திருட்டு வி.சி.டி மற்றும் முறையில்லாமல் திரைப்பட பதிவேற்றம் செய்யும் இணையதளங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர் நடிகர் விஷால்.
ஒவ்வொரு முறை அவரது படம் வெளியாகும்போதும், திருட்டு விசிடி-க்கு எதிராக போராடி வருகிறார்.
சில நாட்களுக்கு முன்னர் இந்திய அரசாங்கம் ஆபாச இணையதளங்களுக்கு தடை விதித்தது. இதற்கு "ஆபாச இணையதளங்களுக்கு தடை விதித்தவாறு, முறையில்லாமல் திரைப்படங்களை பதிவேற்றும் தளங்களையும் அரசு தடை செய்ய வேண்டும் என விரும்புகிறேன்” என்று விஷால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.