இளமைக் காலத்தில் முக்கிய அங்கம் விசு: அஸ்வின் புகழாஞ்சலி

இளமைக் காலத்தில் முக்கிய அங்கம் விசு: அஸ்வின் புகழாஞ்சலி
Updated on
1 min read

இளமைக் காலத்தில் முக்கிய அங்கமாக இருந்தவர் விசு என்று கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

திரையுலகில் பல்வேறு வரவேற்பைப் பெற்ற படங்களை இயக்கியவரும், பல படங்களுக்கு கதாசிரியராக பணிபுரிந்த விசு இன்று (மார்ச் 22) மாலை காலமானார். அவருக்கு வயது 74. அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.

விசு மறைவு தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் அஸ்வின் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"'சம்சாரம் அது மின்சாரம்', 'மணல் கயிறு', 'சிதம்பர ரகசியம்' என நிறையப் படங்கள். என்னுடைய இளமைக் காலத்தில் முக்கிய அங்கமாக இருந்திருக்கிறீர்கள், ஞாயிறுகளில் உங்கள் பட்டிமன்றம், புத்திசாலித்தனமான திரைக்கதை, அழகான நகைச்சுவை என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும்"

இவ்வாறு அஸ்வின் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in