

ட்விட்டர் தளத்தில் இணைந்துள்ளார் சின்னி ஜெயந்த். முதல் பதிவாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திரையுலக பிரபலங்கள் மத்தியில் ட்விட்டர் தளம் மிகவும் பிரபலம். சமீபமாகப் பலரும் தங்களுடைய அறிக்கைகள் மற்றும் புதிய படம் குறித்த தகவல்களை ட்விட்டர் தளத்தில் தான் வெளியிட்டு வருகிறார்கள். தற்போது நடிகர் சின்னி ஜெயந்த்தும் ட்விட்டர் பக்கத்தில் இணைந்துள்ளார்.
(@chinniofficial) என்ற பெயரில் அவருடைய ட்விட்டர் பக்கம் இடம்பெற்றுள்ளது. முதல் ட்வீட்டாக, ட்விட்டர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
“வணக்கம். நான் தான் உங்கள் சின்னி ஜெயந்த். என்ன நீங்கள் ட்வீட் பண்ண மாட்டிக்கிறீங்க. சமூகவலைதளத்தில் இல்லை. பப்ளிசிட்டியே இல்லை என வருத்தப்பட்டார்கள். நான் சொன்னேன், எல்லாரும் அமைதியாக இருக்கும் போது தான் வந்து அசத்துவேன் என்றேன். இப்போது தமிழ்நாடே அமைதியாக, ஏன் இந்தியாவே அமைதியாக இருக்கிறது.
இப்போது சொல்கிறேன் அனைவரும் அமைதியாக இருங்க, ஆனால் அலர்ட்டாக இருங்கள். எல்லாரும் ஸ்ட்ராங்காக இருங்க, ஆனால் சப்போர்ட்டிவாக இருங்கள். அனைவரும் தன்னம்பிக்கையுடன் இருங்க, ஆனால் தள்ளி தள்ளி நில்லுங்கள். அனைவருமே எனக்கு ட்வீட் பண்ணுங்கள், லைக் மற்றும் பாலோ பண்ணுங்கள். எப்படி ஆரம்பமே அதிருதுல்ல”
இவ்வாறு சின்னி ஜெயந்த் தெரிவித்துள்ளார்.