

சஞ்சீவ் - ஆல்யா மானஸா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான சீரியல் 'ராஜா ராணி'. இதில் கணவன் - மனைவியாக நடித்தவர்கள் சஞ்சீவ் - ஆல்யா மானஸா ஜோடி. இந்த ஜோடிக்குப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு
நிஜ வாழ்க்கையிலும் இருவரும் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து சில மாதங்களில் கர்ப்பமானார் ஆல்யா மானஸா. அவ்வப்போது இருவருமே தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்து புகைப்படங்கள், வீடியோக்கள் என வெளியிட்டு வருவார்கள்.
சில நாட்களுக்கு முன்பு இந்த முக்கியமான தருணத்தில் பென்ஸ் கார் வாங்கியிருப்பதாகப் புகைப்படம் வெளியிட்டார்கள். நேற்று (மார்ச் 20) மானஸாவுக்குப் பெண் குழந்தைப் பிறந்தது. இதனை மானஸாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது கணவர் சஞ்சீவ் பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவில் "எங்களுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. உங்களுடைய ஆசீர்வாதங்கள், பிரார்த்தனைகள் தேவை. அம்மா - மகள் இருவருமே நலம். பாப்புக் குட்டிக்கு பாப்பு குட்டி" என்று தெரிவித்துள்ளார் சஞ்சீவ்.
சஞ்சீவ் - ஆல்யா மானஸா தம்பதியினருக்கு தொலைக்காட்சி நண்பர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.