Published : 21 Mar 2020 10:39 AM
Last Updated : 21 Mar 2020 10:39 AM

வடிவேலு பெயரில் உலவும் போலி ட்விட்டர் தளம்

வடிவேலு பெயரில் ட்விட்டர் கணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அது வடிவேலுவின் கணக்கு இல்லை என்று அவரது தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் வடிவேலு. அதற்குப் பிறகு அவர் எந்தவொரு படத்திலுமே நடிக்கவில்லை. 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையால் அவர் திரையுலகிலிருந்து விலகியிருக்கிறார். ஆனால், பேச்சுவார்த்தையின் மூலம் முடிவுக்கு வந்தாலும் எழுத்துபூர்வமாக இன்னும் எதுவும் முடிவாகவில்லை எனத் தெரிகிறது.

இதற்கு முன்பாக 'தெனாலிராமன்' மற்றும் 'எலி' ஆகிய படங்களில் நாயகனாக நடித்திருந்தார் வடிவேலு. அப்போது அவ்விரண்டு படங்களின் இயக்குநரான யுவராஜ், வடிவேலுவின் அனுமதியுடன் ட்விட்டர் கணக்கைத் தொடங்கினார். ஆனால் அந்த இரண்டு படங்கள் தொடர்பான போஸ்டர்கள், ட்ரெய்லர்கள் மட்டுமே பகிர்ந்தார். அதற்குப் பிறகு எந்தவொரு ட்வீட்டுமே அந்தக் கணக்கில் இடம் பெறவில்லை.

தற்போது வடிவேலுவின் பெயரில் ஒரு ட்விட்டர் கணக்கு உலவி வருகிறது. பலரும் இது வடிவேலுதான் என்று அந்தக் கணக்கினை ஃபாலோ செய்து வருகிறார்கள். இது தொடர்பாக வடிவேலு தரப்பில் விசாரித்த போது, "சாருக்கு எந்தவொரு ட்விட்டர் கணக்குமே கிடையாது. அவர் அதில் இணையவும் விரும்பவில்லை. எங்களுக்கும் பலர் அந்த ட்விட்டர் கணக்கு வடிவேலு சாருடையதா என்று கேட்டு வருகிறார்கள். அது போலியானது" என்று தெரிவித்தார்கள்.

வடிவேலுவின் பெயரில் இயக்குநர் யுவராஜ் ஆரம்பித்த ட்விட்டர் தளம்: https://twitter.com/Actor_Vadivelu

வடிவேலுவின் பெயரில் உலவி வரும் போலி ட்விட்டர் தளம்: https://twitter.com/VadiveluOffl

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x