Published : 20 Mar 2020 16:27 pm

Updated : 20 Mar 2020 17:07 pm

 

Published : 20 Mar 2020 04:27 PM
Last Updated : 20 Mar 2020 05:07 PM

மும்பை பாடகரை மணந்த அமலாபால்: சில மணித்துளிகளில் இன்ஸ்டாகிராம் பக்கம் நீக்கம்

amala-paul-marriage

அமலாபாலுடன் திருமணம் செய்து கொண்டதாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பாவ்னிந்தர் சிங்.

'தலைவா' படத்தின் போது இயக்குநர் விஜய்யுடன் காதல் ஏற்பட்டு, அவரைத் திருமணம் செய்து கொண்டார் அமலாபால். ஆனால், சில வருடங்களிலேயே அவரை விவாகரத்து செய்துவிட்டார். தொடர்ச்சியாக நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.


சில மாதங்களுக்கு முன்பு அமலாபால் மீண்டும் காதல் வயப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியானது. ஆனால், தனது காதலர் குறித்த எந்தவொரு விவரத்தையுமே அமலாபால் வெளியிடவே இல்லை. இது குறித்த கேள்விக்குக் கூட "அது என் பெர்சனல் விஷயம்" என்று மட்டுமே பதிலளித்து வந்தார்.

இதனிடையே புவனிந்தர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அமலாபாலைத் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டார். அதனுடன் 'Wedding Throwback' என்றும் குறிப்பிட்டு இருந்தார். இவர் மும்பையைச் சேர்ந்த பாடகர் என்று தகவல் வெளியானது.

ஆனால், புகைப்படங்களை வெளியிட்ட சில மணித்துளிகளில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தையே நீக்கிவிட்டார். சில மாதங்களுக்கு முன்பே இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அன்பு வாசகர்களே....


வரும் மார்ச் 31 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!



அமலா பால்அமலா பால் திருமணம்பாவ்னிந்தர் சிங்காதலருடன் அமலா பால் திருமணம்அமலா பால் ரகசிய திருமணம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author