மீண்டு வந்துள்ளது மனித குலத்துக்கான தன்னம்பிக்கை: கரோனா அச்சம் குறித்து ஜி.வி.பிரகாஷ்

மீண்டு வந்துள்ளது மனித குலத்துக்கான தன்னம்பிக்கை: கரோனா அச்சம் குறித்து ஜி.வி.பிரகாஷ்
Updated on
1 min read

மீண்டு வந்துள்ளது மனித குலத்துக்கான தன்னம்பிக்கை என்று கரோனா அச்சம் குறித்து ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸுக்கு இதுவரை 2 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 ஆயிரம் மக்கள் உயிரிழந்துள்ளனர். கரோனா வைரஸைத் தடுக்க ஒவ்வொரு நாடும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவில் கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.

இதுவரை இந்த வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்றாலும், பலரும் இதிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தற்போது இந்தியாவை கரோனா அச்சம் தொற்றிக் கொண்டுள்ளது. கூட்டமாகக் கூட வேண்டாம் என்று பொதுமக்களுக்கு பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.

இது தொடர்பாக ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

''கரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத சூழலிலும் உலகமெங்கும் பல லட்சக்கணக்கான மக்கள் அதை வென்று மீண்டு வந்துள்ளனர் என்பது மனித குலத்துக்கான தன்னம்பிக்கை. நாமும் விழிப்புடன் இருப்போம். வரும் முன் காக்க முடியும் என்பதால் அதையே தற்போதைய மருத்துவமாகக் கையாளுவோம்''.

இவ்வாறு ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in