

ஜான்சன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் சந்தானத்துக்கு நாயகியாக அனைகா ஒப்பந்தமாகியுள்ளார்.
ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான படம் 'ஏ1'. இந்தப் படம் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து சந்தானம் - ஜான்சன் கூட்டணி மீண்டும் இணைய முடிவு செய்து, முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டன.
தான் நடித்து வந்த 'டிக்கிலோனா', 'பிஸ்கோத்' படத்தின் பணிகளை முடித்துவிட்டார் சந்தானம். இதனைத் தொடர்ந்து, ஜான்சன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் பணிகளைத் தொடங்கியுள்ளார் சந்தானம். இதன் படப்பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு நேற்று (மார்ச் 16) நடைபெற்றது. இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தமாகியுள்ளார்.
இதில் சந்தானத்துக்கு நாயகியாக அனைகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழில் 'காவியத் தலைவன்', 'செம போத ஆகாத' மற்றும் 'கீ' உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர். தற்போது சந்தானத்துக்கு நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.