மிகவும் பணிவானவர், இனிமையானவர் விஜய்: மாளவிகா மோகனன்

மிகவும் பணிவானவர், இனிமையானவர் விஜய்: மாளவிகா மோகனன்
Updated on
1 min read

மிகவும் பணிவானவர், இனிமையானவர் விஜய் என்று 'மாஸ்டர்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை மாளவிகா மோகனன் பேசினார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே இசை வெளியீட்டு விழா மூலம் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

'மாஸ்டர்' இசை வெளியீட்டு விழா படக்குழுவினர் முன்னிலையில் சென்னையில் நேற்று (மார்ச் 15) நடைபெற்றது. இதில் நாயகியாக நடித்திருக்கும் மாளவிகா மோகனன் பேசியதாவது:

''இப்போதுதான் முதல் முறை மேடையில் தமிழ் பேசுகிறேன். விஜய் சாருடன் நடித்ததன் மூலம் என் கனவு நனவாகியிருக்கிறது. நாட்டின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்களில் ஒருவருடன் நடிப்பதாக நான் உணரவில்லை. நான் இதுவரை பணிபுரிந்ததிலேயே நீங்கள்தான் மிகவும் பணிவானவர், இனிமையானவர். உங்களோடு இணைந்து நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி.

‘மாஸ்டர்’ படத்தில் எனக்கு ஒரு கதாபாத்திரத்தைக் கொடுத்த லோகேஷுக்கு நன்றி. இது ஒரு அற்புதமான அனுபவம். நான் பணியாற்றியதிலேயே மிகவும் கூலான இயக்குநர் நீங்கள். நம்மில் யாரும் எந்த வித்தியாசத்தையும் உணரமுடியாத அளவுக்குப் படப்பிடிப்புத் தளம் மகிழ்ச்சியாக இருந்தது. படக்குழுவினருக்கும் மிக்க நன்றி. நீங்கள் ஒவ்வொருவரும் மிகவும் திறமைசாலிகள்”.

இவ்வாறு மாளவிகா மோகனன் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in