Last Updated : 13 Mar, 2020 10:02 AM

 

Published : 13 Mar 2020 10:02 AM
Last Updated : 13 Mar 2020 10:02 AM

பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழ் திரையுலகினர் விரைவில் சந்திப்பு: தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் புதிய இயக்குநர் ராஜேஷ் கண்ணா தகவல்

பிரதமர் மோடியுடன் தமிழ் திரையுலகினர் சந்திக்கும் நிகழ்ச்சியை விரைவில் நடத்த உள்ளதாக தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழக இயக்குநராக பொறுப்பேற்ற ராஜேஷ் கண்ணா தெரிவித்தார்.

மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ்மும்பையை தலைமையிடமாகக் கொண்டு தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம்(என்எஃப்டிசி) செயல்படுகிறது. சமூக கருத்துகள் கொண்ட திரைப்படங்கள், அரசு விளம்பரங்கள் தயாரிப்பது, மத்திய அரசின் விருதுநிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பணிகளை இந்த அமைப்பு மேற்கொள்கிறது.

சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் தனியாக அலுவலகங்களை அமைத்து, திரைத் துறையில் சாதிக்க விரும்புவோருக்கு தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு பயிற்சிகளையும் வழங்கி வருகிறது.

இதன் தேசிய இயக்குந ராக, தமிழக பாஜகவின் கூட்டுறவு பிரிவு துணை தலைவரான ராஜேஷ் கண்ணாவை மத்திய அரசு கடந்த வாரம் நியமித்தது.

இந்நிலையில், மும்பையில் உள்ள என்எஃப்டிசி தலைமை அலுவலகத்தில் ராஜேஷ் கண்ணா நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்டார்.

பின்னர், மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்திப்பதற்காக டெல்லி வந்த ராஜேஷ் கண்ணா, ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறியதாவது:

திரைத் துறையில் சாதிக்கவிரும்பும் தமிழக இளைஞர்களுக்கு தேவையான பயிற்சிகளை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தரமான தமிழ் திரைப்படங்கள், தமிழக இளை ஞர்களின் குறும்படங்களை தேசிய, சர்வதேச அளவிலான விருது நிகழ்ச்சிகளுக்கு கொண்டு செல்ல அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்.

பிரதமர் மோடியுடன் தமிழ் திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் ஒரு சந்திப்பு நிகழ்ச்சியை விரைவில் நடத்தவும் திட்டமிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x