ஓய்வுக்காக வெளிநாடு சென்றார் விஜய்

ஓய்வுக்காக வெளிநாடு சென்றார் விஜய்
Updated on
1 min read

'மாஸ்டர்' படத்தின் பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டு ஓய்வுக்காக வெளிநாடுச் சென்றுவிட்டார் விஜய்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாஸ்டர்'. ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா ஏப்ரல் 15-ம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெறவுள்ளது.

இதனிடையே, இந்தப் படத்தின் படப்பிடிப்பு, டப்பிங் பணிகள் உள்ளிட்ட அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டார் விஜய். இசை வெளியீட்டு விழாவிலும் கலந்து கொள்ளவுள்ளார். இந்த ஒரு வார இடைவெளியில் ஓய்வெடுக்கலாம் என்று வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார் விஜய்.

எந்த நாட்டுக்குச் சென்றுள்ளார் என்பதை விஜய் தரப்பு தெரிவிக்கவில்லை. சென்னை விமான நிலையத்தில் விஜய் நடந்து சொல்லும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த மாத இறுதியில் விஜய்யின் அடுத்த பட இயக்குநர் யார் என்பது முடிவாகிவிடும் என்கிறார்கள். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in