நடுவர்கள் ஓர் அறிமுகம்!

‘கலக்கப்போவது யாரு’ சீசன்-9 நடுவர் குழு.
‘கலக்கப்போவது யாரு’ சீசன்-9 நடுவர் குழு.
Updated on
1 min read

எட்டு சீசன்களை கடந்து 9-வது சீசனாக விஜய் தொலைக்காட்சியின் ‘கலக்கப்போவது யாரு?’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகிவருகிறது. இதில் இந்த வாரம் ‘நடுவர்கள் அறிமுக வாரம்’. இதுகுறித்து நிகழ்ச்சி தரப்பில் கூறியதாவது:

‘கலக்கப்போவது யாரு?’ 9-வது சீசனுக்காக தமிழகம் முழுவதிலும் இருந்து 60-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். கடந்த 3 வாரங்களாக நடந்த தேர்வில் தணிக்கை செய்யப்பட்டு, 30 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பல்வேறு விதமான காமெடி தர்பார் அலப்பறைகளை அரங்கேற்ற காத்திருக்கின்றனர். சிவா - கிரி, காயத்ரி, ப்ரகதீஷ் - செந்தில் என சில போட்டியாளர்கள் இந்த வாரம் சிறப்பான நகைச்சுவையை வழங்க உள்ளனர்.

மேலும், இந்த வாரம் நடுவர்கள் அறிமுக வாரம் என சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாக உள்ளது. அதில், ரம்யா பாண்டியன், வனிதா விஜயகுமார், ஈரோடு மகேஷ், மதுரை முத்து, ஆதவன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். அவர்கள் தனித்தனியாக அறிமுகம் செய்து வைக்கப்படுகின்றனர். நடுவர்களில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு நடுவர் தனியே நிகழ்த்தும் நகைச்சுவை நிகழ்ச்சியும் இடம்பெறும். அந்த வகையில், மதுரை முத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு தனியே நிகழ்த்தும் நகைச்சுவை சரவெடிகள் இந்த வாரம் இடம்பெற உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in