'பியர் கிரில்ஸ்' நிகழ்ச்சியில் ரஜினி: ஒளிபரப்புத் தேதி அறிவிப்பு

'பியர் கிரில்ஸ்' நிகழ்ச்சியில் ரஜினி: ஒளிபரப்புத் தேதி அறிவிப்பு
Updated on
1 min read

'பியர் கிரில்ஸ்' நிகழ்ச்சியில் ரஜினி கலந்துகொண்ட நிகழ்வு, மார்ச் 23-ம் தேதி ஒளிபரப்பாகும் என டிஸ்கவரி சேனல் அறிவித்துள்ளது.

டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியான 'மேன் வெர்சஸ் வைல்ட்' உலகம் முழுக்க புகழ் பெற்றதாகும். இந்தியாவிலும் இந்த நிகழ்ச்சியைப் பிரபலப்படுத்த பியர் கிரில்ஸ் உடன் இந்தியப் பிரதமர் மோடி ஏற்கெனவே கலந்து கொண்டார்.

தற்போது டிஸ்கவரி சேனல் தமிழிலும் தங்களது ஒளிபரப்பைத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் விளம்பரப்படுத்த முதலாவதாக பியர் கிரில்ஸ் நிகழ்ச்சியில் ரஜினி கலந்துகொண்டார். இதற்கான படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பந்திபுரா புலிகள் காப்பகத்தில் நடைபெற்றது. 2 நாட்கள் இதன் படப்பிடிப்பு நடந்தது.

ரஜினியுடனான நிகழ்ச்சி குறித்து தனது ட்விட்டர் பதிவில் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார் பியர் கிரில்ஸ். இந்த நிகழ்ச்சியில் நீர்நிலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு தொடர்பாகப் பேசியுள்ளார் ரஜினிகாந்த். டிஸ்கவரி சேனலில் 'இன் டூ தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்' என்ற நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் என்பது தெரியாமல் இருந்தது.

தற்போது, மார்ச் 23-ம் தேதி இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவித்துள்ளது டிஸ்கவரி சேனல். இதற்காக புதிய ப்ரோமோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இதில் ரஜினி ஸ்டைலாக வண்டி ஓட்டிக்கொண்டு வருவது உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ரஜினி என்ன பேசியுள்ளார் உள்ளிட்ட ப்ரோமோக்கள் அடுத்தடுத்து வெளியாகும் எனத் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in