

ஜீதமிழ் சேனலில் வரும் வாரம் முதல் ஒளிபரப்பாக உள்ள ‘நீதானே எந்தன் பொன்வசந்தம்’ தொடர் வழியாக சின்னத்திரைக்கு அறிமுகமாகிறார் நடிகை தர்ஷனா. கவித்துமான காதல் கலந்த நெடுந்தொடரான இதில், அனு என்ற கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.
இதுகுறித்து கேட்டபோது, ‘‘என் பூர்வீகம் கேரளா. வளர்ந்தது சேலம். சின்ன வயதில் இருந்தே நடிக்கும் ஆசை இருந்தது. ஆனா, இதற்கு முன்பு குறும்படம், டிக்டாக் வீடியோவில் கூட நடித்தது இல்லை. மாடலிங் ஃபோட்டோஷூட் ஆர்வம் அதிகம். அந்த புகைப்படங்களை எல்லாம் இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது வழக்கம். அப்படி அமைந்ததுதான் ‘நீதானே எந்தன் பொன்வசந்தம்’ சீரியல் வாய்ப்பு. கன்னடத்தில் பெரும் வரவேற்பை பெற்ற ‘ஜோதே ஜோதேயலி’ என்ற தொடரின் ரீமேக்தான் இது.
ரொம்ப பிடிச்ச கதையம்சம் என்பதால், எப்போ ஷூட்டிங் போகலாம் என்று மிகவும் ஆர்வத்துடன் இருந்தேன். சின்னத்திரை நேயர்கள் என் முதல் அத்தியாயத்தை வரும் வாரம் பார்க்கப்போறாங்க. என் நடிப்பு எப்படி இருக்குன்னு சின்னத்திரையில் நானும் பார்க்கப்போறேன். அதற்காக ஆவலோடும், எதிர்பார்ப்போடும் காத்திருக்கேன்’’ என்கிறார் தர்ஷனா.