

நடிகர் அர்ஜுன் தற்போது நடித்து வரும் திரைப்படத்தின் கதை, சமீபத்தில் சல்மான் கான் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'பஜ்ரங்கி பைஜான்' படத்தின் கதையைப் போல இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரு நேரத்தில் உருவாகும் 'ராணி ராணம்மா' என்ற திரைப்படத்தில் அர்ஜுன் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
ஹைதராபாத்தில் வசிக்கும் தமிழராக நடித்துள்ள அர்ஜுன், இலங்கையைச் சேர்ந்த பெண்ணை அந்த நாட்டில் கொண்டு சேர்ப்பதுதான் இந்தப் படத்தின் கதை. கோடி ராமகிருஷ்ணா இயக்கும் இந்தப் படத்தில் லக்ஷ்மி ராய் கதாநாயகியாக நடிக்கிறார்.
இலங்கையில் படப்பிடிப்பு விரைவில் நடைபெறவுள்ளது. படத்தின் வெளியீடு அக்டோபரில் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் தொலைந்து போகும் பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுமியை, அந்த நாட்டிற்கே சல்மான் கான் கொண்டு சேர்ப்பதே 'பஜ்ரங்கி பைஜான்' படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.