Published : 17 Feb 2020 06:45 PM
Last Updated : 17 Feb 2020 06:45 PM

இயக்குநரான ரம்யா நம்பீசன்

'UNHIDE' என்ற குறும்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார் ரம்யா நம்பீசன்.

'ஒரு நாள் ஒரு கனவு' என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் ரம்யா நம்பீசன். முன்னதாகவே பல்வேறு மலையாளப் படங்களில் நடித்திருந்தார். தற்போது பத்ரி இயக்கத்தில் ரியோவுடன் 'ப்ளான் பண்ணி பண்ணனும்', சிபிராஜ் உடன் 'ரேஞ்ஜர்', விஜய் ஆண்டனியுடன் 'தமிழரசன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் பாடியுள்ளார்.

தற்போது, 'Ramya Nambeesan Encore' என்ற யூ டியூப் பக்கம் தொடங்கி 'UNHIDE' என்ற குறும்படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். இந்தக் குறும்படம் சமூகத்தில் பெண்களின் வாழ்வையும், பிரச்சினைகளையும் அதற்கான தீர்வையும் பேசுகிறது.

இந்தக் குறும்படத்தை இயக்கியுள்ளது தொடர்பாக ரம்யா நம்பீசன் கூறுகையில், "எனது பார்வையை, எனது உலகத்தை, புதுப்புது ஐடியாக்களை, பல புதுமையான விஷயங்களை முயன்று பார்க்க மிகப்பெரும் சுதந்திரம் இந்த Youtube தளத்தின் மூலம் எனக்குக் கிடைத்திருக்கிறது. இந்த தளத்திற்காக முதல் குறும்படமாக 'UNHIDE' எடுக்க ஆரம்பித்தேன். இது இயக்குநராக எனது முதல் முயற்சி.

இந்தக் குறும்படம் இன்றைய நவநாகரிக உலகில் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளை, இந்தியச் சமூகத்தில் அவர்களின் நிலையைச் சொல்லக்கூடியது. இந்தக் குறும்படம் எனது முதல் படைப்பாகத் தமிழுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது. இந்தக் குறும்படம் வழக்கமான வீடியோ போல் வெறும் பிரச்சினைகளை மட்டுமே பேசக்கூடிய ஒன்று அல்ல. இறுதியில் பிரச்சினைகளுக்கான தீர்வைப் பற்றி விவாதம் செய்வதாகவும் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார் ரம்யா நம்பீசன்.

'UNHIDE' குறும்படத்தைத் தன் குரலில் விவரித்து இயக்கியுள்ளார் ரம்யா நம்பீசன். ஸ்ரிதா ஷிவதாஸ் உடன் இணைந்து இந்தக் குறும்படத்தில் நடித்தும் உள்ளார். பத்ரி வெங்கடேஷ் வசனம் எழுதியுள்ள இந்தக் குறும்படத்துக்கு நீல் சுன்னா ஒளிப்பதிவாளராகவும், ரோஜின் தாமஸ் எடிட்டராகவும் பணிபுரிந்துள்ளனர்.

தவறவிடாதீர்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x