செப்டம்பர் 17-ல் கபாலி படத்தின் முதல் பார்வை?

செப்டம்பர் 17-ல் கபாலி படத்தின் முதல் பார்வை?
Updated on
1 min read

ரஜினிகாந்த் - ரஞ்சித் இணையும் கபாலி படத்தின் முதல் பார்வை செப்டம்பர் 17-ஆம் தேதி வெளியாகலாம் என தெரிகிறது.

மெட்ராஸ், அட்டக்கத்தி உள்ளிட்ட படங்களின் இயக்குநர் ரஞ்சித், ரஜினிகாந்தை வைத்து இயக்கவுள்ள படத்தின் தலைப்பு கபாலி என்பது கடந்த வாரம் உறுதிசெய்யப்பட்டது. தொடர்ந்து படத்துக்கான ஃபோட்டோஷூட் நடைபெற்றது. படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில் ரஜினி தோன்றவுள்ளார்.

சென்னையை சேர்ந்த தாதாவின் கதையாக இப்படம் உருவாகவுள்ளது. இதில் ராதிகா ஆப்தே கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் செப்டம்பர் 17 அன்று வெளியாகலாம் என தயாரிப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தில் தன்ஷிகா, கலையரசன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோரும் நடிக்கவுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in