பிரசன்னா - சினேகா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது
சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரசன்னா - சினேகா தம்பதிக்கு சென்னையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் சினேகா. சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் சில படங்களில் நடித்து வந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு சினேகா கர்ப்பம் தரித்தார். அதனைத் தொடர்ந்து படங்களில் நடிப்பதையும், பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் தவிர்த்து வந்தார்.
இந்நிலையில், இன்று காலை சென்னையில் பிரசன்னா - சினேகா தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்தது குறித்து பிரசன்னா, "நேற்றைய நாள் மிக நீண்ட நாள்; நேற்றைய இரவு ஒரு பிரகாசமான இரவு; அந்த நீண்ட இரவு மகிழ்ச்சியுடன் விடிந்தது. ஆம், எனது தேவதை ஆண் குழந்தையை ஈன்றெடுத்தாள்" என்று ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருக்கிறார்.
