நடிகையாக அறிமுகமாகும் மணிமேகலை

நடிகையாக அறிமுகமாகும் மணிமேகலை
Updated on
1 min read

நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணிபுரிந்து வந்த மணிமேகலை, சீரியல் ஒன்றின் மூலம் நடிகையாக அறிமுகமாகவுள்ளார்.

தொலைக்காட்சியில் பிரபலமாகி, பின்பு திரையுலகில் அறிமுகமானவர்கள் பட்டியல் மிகவும் நீளம். இதில் திரையுலகில் அறிமுகமாகி பெரும் வெற்றியடைந்தவர்கள் பட்டியலில் சிவகார்த்திகேயன் மிகவும் முக்கியமானவர்.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணிபுரிந்து வருபவர் மணிமேகலை. விஜய் தொலைக்காட்சிக்கு முன்பு பல்வேறு தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், தொலைக்காட்சி அல்லாமல் இதர நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பாரதி கண்ணம்மா' சீரியல் மூலமாக நடிகையாகவும் அறிமுகமாகிறார் மணிமேகலை. "எனக்கு வராத துறை. நடிப்பில் ஒரு சின்ன அறிமுகம்" என்று 'பாரதி கண்ணம்மா' சீரியலில் நடிப்பதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

சின்னத்திரையில் மணிமேகலை நடிக்க இருப்பதால், நண்பர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in