ஹாலிவுட்டில் நடிக்கும் பார்த்திபன்

ஹாலிவுட்டில் நடிக்கும் பார்த்திபன்
Updated on
1 min read

இயக்கம், நடிப்பு, தயாரிப்பு என்று பல தளங்களில் இயங்கி வரும் பார்த்திபன், தற்போது ஹாலிவுட்டிலும் நடிகராக அறிமுகமாகவுள்ளார்.

கடந்த ஆண்டு பார்த்திபன் இயக்கி, நடித்து, தயாரித்து வெளியான 'ஒத்த செருப்பு சைஸ் 7' படத்துக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. படம் முழுக்கவே அவருடைய கதாபாத்திரம் மட்டுமே இருக்கும். இந்தப் படத்துக்காக பல்வேறு விருதுகளை வென்றார் பார்த்திபன்.

இந்தப் படத்தின் இந்தி மற்றும் ஹாலிவுட் ரீமேக்கிற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தி ரீமேக்கில் நவாசுதீன் சித்திக் நடிப்பார் எனத் தெரிகிறது. இதனிடையே இந்தப் படத்தைப் பார்த்த ஹாலிவுட் இயக்குநர், பார்த்திபனை அவருடைய படத்தில் நடிக்கவைக்க அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பார்த்திபன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "02-02-2020. இன்றைய தேதியின் வி(சேஷ)சேதி. விஜய் சேதுபதியின் பாதியாக நடிக்கும் 'துக்ளக் தர்பார்', Amazon-னின் புஷ்கர் காயத்ரி வழங்கும் 'சுழல்'என்ற வெப் சீரிஸ், சிம்ரனின் சொந்தப் படம், எழில் இயக்க ராஜேஷ் குமாரின் நாவலில் நடிக்கும் படம், சமீப பிரபல இயக்குநரின் படம், என் 'இரவின் நிழல்' இன்னும் சில! இவையன்றி.

Really its a great pleasure for me to announce that, ஏன் ஏன் Suddenly ஆங்கிலம்? Yeah! இவ்வருட கடைசியில் ஒரு நேரடி ஆங்கிலப் படத்தில் நடிக்கிறேனாக்கும்...( OS7 பார்த்த ஹாலிவுட் இயக்குநரின் அழைப்பில் மார்ச்-ல் L A செல்கிறேன்) மற்ற விவரங்கள் விரைவில்” என்று தெரிவித்துள்ளார் பார்த்திபன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in