'தலைவர் 168' அப்டேட்: நயன்தாரா ஒப்பந்தம்

'தலைவர் 168' அப்டேட்: நயன்தாரா ஒப்பந்தம்
Updated on
1 min read

சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

'தர்பார்' படத்தின் பணிகளை முடித்துவிட்டு, சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. முதற்கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது.

இதில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, சதீஷ், சூரி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வருகின்றனர். யார் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்ற எந்தவொரு தகவலையுமே படக்குழு வெளியிடவில்லை. மேலும், அனைத்தையுமே மிக ரகசியமாக வைத்துள்ளது படக்குழு.

தற்போது, இந்தப் படத்தில் நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. சிவா இயக்கத்தில் அஜித் நடித்து பெரும் வரவேற்பைப் பெற்ற 'விஸ்வாசம்' படத்தில் நாயகியாக நடித்தவர் நயன்தாரா. இதனால் அந்த சென்டிமென்ட்டை சிவா தொடர்கிறார் எனத் தெரிகிறது.

மேலும், ரஜினி நடித்த 'சந்திரமுகி', 'குசேலன்', 'சிவாஜி' மற்றும் 'தர்பார்' ஆகிய படங்களிலும் நடித்துள்ளார் நயன்தாரா. இதனால் ரஜினி - சிவா கூட்டணி படத்துக்கும் நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in