

வேந்தர் தொலைக்காட்சியில் ‘பதில் சொல்லு பரிசை வெல்லு’ நிகழ்ச்சி வழியே கவனம் ஈர்த்து வருகிறார் அஞ்சலி.
‘‘இங்கு வந்து ஓராண்டு போனதே தெரியவில்லை. அறிவு சார்ந்த நிகழ்ச்சி, செய்தி வாசிப்பு என தினம் தினம் மிகுந்த புத்துணர்ச்சியுடன் சேனல் வேலைகள் நகர்கின்றன. இதற்கு நடுவே மேடை நிகழ்ச்சிகள், மாடலிங் மீதும் ஆர்வம் வந்துடுச்சு. சினிமாவில் ஹீரோயின் தங்கை கதாபாத்திரம் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். அப்படித்தான் இங்கு பல நடிகைகள் உருவாகியிருக்காங்க. அதுபோன்ற முக்கியமான கதாபாத்திரத்துக்காக காத்திருக்கேன். இப்போதைக்கு ‘டிக் டாக்’கில் நடிப்பதுதான் எனக்கு பெரிய பயிற்சி. சீக்கிரமே சினிமாவில் பார்க்கலாம். சமீபகாலமாக டப்பிங் வாய்ப்புகளும் வர ஆரம்பிச்சிருக்கு. அதிலும் ஒரு ரவுண்ட் வரணும்..’’ என்கிறார் அஞ்சலி.