ரஜினியை விமர்சித்தவர்களுக்குப் பிரபல ஒளிப்பதிவாளர் பதிலடி

ரஜினியை விமர்சித்தவர்களுக்குப் பிரபல ஒளிப்பதிவாளர் பதிலடி
Updated on
1 min read

ரஜினியை விமர்சித்தவர்களுக்குப் பிரபல ஒளிப்பதிவாளர் நட்ராஜ் பதிலடிக் கொடுத்துள்ளார்.

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட டிஸ்கவரி தொலைக்காட்சி சேனலின் 'மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சி உலகப் புகழ் பெற்றதாகும். இந்த நிகழ்ச்சியின் நாயகன் பியர் கிரில்ஸ், அடர்ந்த வனப்பகுதியில் ஆபத்தான சூழ்நிலைகளில் எவ்வாறு உயிர் பிழைத்திருப்பது, அங்கிருந்து எப்படித் தப்பி வருவது குறித்து மக்களுக்குக் கற்றுத் தருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, இந்தியப் பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் ரஜினியும் கலந்து கொண்டார். இதற்கான படப்பிடிப்பு மைசூரில் உள்ள பந்திபுரா புலிகள் காப்பகத்தில் கடந்த 2 நாட்கள் முடிவடைந்தது.

இந்தப் படப்பிடிப்பின் போது ரஜினிக்குக் காயம் ஏற்பட்டது என்று தகவல் பரவியது. இதனைத் தொடர்ந்து பலரும் ரஜினியைக் கிண்டல் செய்யத் தொடங்கினார்கள். அது தொடர்பான மீம்ஸ்கள் என இணையத்தில் வட்டமிட்டது.

அப்போது ரஜினியைக் கிண்டல் செய்தவர்களுக்குப் பதிலடிக் கொடுக்கும் வகையில் பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகரான நட்ராஜ் “ஒன்னும் ஆகாது.. போனது சிங்கம்.... காட்ட மட்டும் இல்ல நாட்டையும் ஆளும்..” என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இந்த ட்வீட் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றது.

நேற்றிரவு சென்னை திரும்பியவுடன் விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், தனக்குக் காயம் ஏற்படவில்லை என்றும் சில முட்கள் குத்தின என்று ரஜினி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in