தவறவிடக்கூடாத 3 தமிழ்ப் படங்கள்: மிஷ்கின் பரிந்துரை

தவறவிடக்கூடாத 3 தமிழ்ப் படங்கள்: மிஷ்கின் பரிந்துரை
Updated on
1 min read

தவறவிடக்கூடாத 3 தமிழ்ப் படங்களை மிஷ்கின் பரிந்துரை செய்துள்ளார்.

மிஷ்கின் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் ‘சைக்கோ’. உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ், ராஜ்குமார், இயக்குநர்கள் ராம் மற்றும் சிங்கம்புலி, பவா செல்லத்துரை, ரேணுகா ஆகியோர் இந்தப் படத்தில் நடித்தனர்.

இளையராஜா இசையமைத்த இந்தப் படத்துக்கு, தன்விர் மிர் ஒளிப்பதிவு செய்தார். டபுள் மீனிங் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்தது. பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் படம், கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

படத்தின் ப்ரமோஷனை முன்னிட்டு, படம் வெளியாவதற்கு முன்பும் பின்பும் பேட்டிகள் கொடுத்து வருகிறார் மிஷ்கின். அதில், தவறவிடாமல் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய 3 படங்கள் குறித்து ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது.

அதற்கு, “ ‘செவன் சாமுராய்’ (seven samurai - ஜப்பானிய மொழி), ‘ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்’ (schindler's list - ஆங்கிலம்), ‘எ மேன் எஸ்கேப்டு’ (A Man Escaped - ஃப்ரெஞ்ச் மற்றும் ஜெர்மன்)” எனப் பதிலளித்தார் மிஷ்கின்.

அவராகவே தொடர்ந்து, “ ‘தமிழ்ல படங்களே இல்லையா?’னு இந்த வீடியோவுக்குக் கீழே யாராவது கேட்பாங்க. தமிழ்ப் படங்களில் ‘சுமைதாங்கி’ (இயக்குநர் சி.வி.ஸ்ரீதர் - 1962), ‘புன்னகை’ (இயக்குநர் கே.பாலச்சந்தர் - 1971), ‘சிறை’ (இயக்குநர் ஆர்.சி.சக்தி - 1984) ஆகிய படங்களைத் தவறவிடாமல் பார்க்க வேண்டும். இன்னும் நிறைய படங்கள் உள்ளன. ஆனால், உடனடியாக நினைவுக்கு வருபவை இவைதான்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in