

விஜய் நடிப்பில் தயாராகி வரும் 'புலி' படத்தின் ட்ரெய்லர், வெளியான 20 மணி நேரத்துக்குள் 10 லட்சம் பார்த்து ரசித்துள்ளனர்.
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ரீதேவி, சுதீப், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், பிரபு, நந்திதா உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி வரும் படம் 'புலி'. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு நட்டி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பி.டி.செல்வகுமார் மற்றும் ஷிபு தமீன்ஸ் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகி வரும் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனால் இப்படத்தின் ட்ரெய்லர் எப்போது என விஜய் ரசிகர்கள் மத்தியில் ஆவலுடன் காத்திருந்தனர்.
இப்படத்தின் ட்ரெய்லர் ஆகஸ்ட் 20ம் தேதி யு-டியூப் தளத்தில் வெளியிடப்பட்டது. வெளியான 20 மணி நேரத்துக்குள் 10 லட்சம் பேர் இப்படத்தின் ட்ரெய்லரை கண்டு ரசித்திருக்கிறார்கள்.
ஒரு புறம் சாதனை புரிந்து வரும் 'புலி' ட்ரெய்லர், மறுபுறம் பல்வேறு விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. பல்வேறு நபர்கள் ட்ரெய்லர் குறித்த தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டின் போதும், இதே போன்று பாடல்களும் சர்ச்சையில் சிக்கியது நினைவு கூறத்தக்கது.