உலகளவில் முதலிடத்தில் ட்ரெண்ட்டான #MasterThirdLook

உலகளவில் முதலிடத்தில் ட்ரெண்ட்டான #MasterThirdLook
Updated on
1 min read

’மாஸ்டர்’ படத்தின் மூன்றாவது போஸ்டருக்கான ட்விட்டர் ட்ரெண்ட் உலகளவில் முதலிடத்தில் ட்ரெண்ட்டானது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாஸ்டர்'. சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்தப் படத்திலிருந்து விஜய் - விஜய் சேதுபதி இருவருமே இருக்கும் புதிய போஸ்டர் நேற்று (ஜனவரி 26) வெளியிடப்பட்டது. இது தொடர்பாக #MasterThirdLook என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு பலரும் தங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்து வந்தார்கள்.

'மாஸ்டர்' படத்தின் 3-வது போஸ்டர் வடிவமைப்புக்குப் பிரபலங்கள் தொடங்கி, ரசிகர்கள் வரை பலரும் தங்களது பாராட்டைத் தெரிவித்தார்கள். இதனால் #MasterThirdLook என்ற ஹேஷ்டேக் உலகளவில் ட்ரெண்ட்டாக தொடங்கியது. சில மணி நேரத்தில் உலகளவில் முதலிடத்தில் ட்ரெண்ட்டானது. இதனால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, வி.ஜே.ரம்யா, கெளரி கிஷன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். ஏப்ரல் வெளியீட்டுக்குத் தயாராகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை பிப்ரவரிக்குள் முடிக்கப் படக்குழு முடிவு செய்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in