'மீண்டும் ஒரு மரியாதை' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

'மீண்டும் ஒரு மரியாதை' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
Updated on
1 min read

பாரதிராஜா நடித்து, தயாரித்துள்ள 'மீண்டும் ஒரு மரியாதை' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரதிராஜா இயக்கி, நடித்து, தயாரித்த படம் ‘ஓம்’. இந்தப் படத்தில் ராசி நக்‌ஷத்ரா, மெளனிகா, ஜோ மல்லூரி உள்ளிட்ட பலர் பாரதிராஜாவுடன் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பணிகள் அனைத்துமே முடிவுற்றாலும், வெளியிட முடியாமல் இருந்தது.

தற்போது இந்தப் படத்தின் தலைப்பை ’மீண்டும் ஒரு மரியாதை’ என மாற்றியுள்ளனர். பிப்ரவரி 21-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் எனவும் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். அயல்நாட்டில் ஒரு வயோதிக ஆணும், ஒரு இளம் பெண்ணும், தத்தமது உறவுகளால், உறவில் ஏற்பட்ட சிக்கல்களால் பாதிக்கப்படும் போது, அதனை எவ்வாறு எதிர்கொண்டு, போராடி, வெற்றிக் கொள்கிறார்கள் என்பதை தமக்கே உரிய தனித்துவமான விதத்தில் இயக்கி, நடித்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா.

ஒளிப்பதிவாளராக சாலை சகாதேவன், கலை இயக்குநராக மோகன மகேந்திரன், இசையமைப்பாளராக ரகுநந்தன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in