ஆர்வத்துக்கு கிடைக்கும் பாராட்டு!

ஆர்வத்துக்கு கிடைக்கும் பாராட்டு!
Updated on
1 min read

சன் மியூசிக் சேனலில் ஒளிபரப்பாகிவரும் ‘டிக் டிக் டிக்’ நிகழ்ச்சி வழியே அனைவரது கவனத்தையும் ஈர்த்து, சிறந்த தொகுப்பாளினி என்று பெயர் வாங்கி வருகிறார் சஷ்டிகா.

‘‘என் சின்னத்திரை பயணம் சுட்டி டிவியில் இருந்துதான் தொடங்கியது. தொகுப்பாளினியாகத்தான் பயணிக்கப் போறோம்னு ஆரம்பத்தில் நினைத்ததுகூட இல்லை. நிகழ்ச்சி தயாரிப்பாளராகத்தான் சேனலுக்குள் வட்டமடித்தேன். அங்கிருந்து, சன் டிவியில் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் செய்திப் பிரிவுக்குள் நுழைஞ்சேன். அங்கும் நல்ல பெயர் வாங்கி, சன் மியூசிக் பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்குள் வந்தாச்சு. இங்கு வந்து ‘ஹிட் லிஸ்ட்’, ‘ப்ரீயா வுடு’ என பரவலாக நிகழ்ச்சிகள் வழங்க ஆரம்பிச்சேன்.
கடந்த ஜூலையில்தான் ‘டிக் டிக் டிக்’ நிகழ்ச்சிக்குள் வந்தேன். இங்கு வந்ததுமே பாராட்டு மழை. எதிர்காலத் திட்டம் என்றெல்லாம் எதுவும் இல்லை. செய்யும் வேலையை ஆர்வத்தோடும், பொறுப்பாகவும், ரசிச்சும் செய்தா போதும். வேலைகளை ஈடுபாட்டோடு செய்வதால், நிறைய பாராட்டுகளும் கிடைக்குது’’ என்று கூறும் சஷ்டிகாவுக்கு சொந்த ஊர் குன்னூர்.

‘‘பிறந்து வளர்ந்தது எல்லாம் குன்னூர்லதான். படிப்பு ஊட்டியில். இப்போ சென்னைவாசி. அப்பா, அம்மா கோயம்புத்தூர்ல இருக்காங்க. ரெண்டு நாள் லீவு கிடைச்சாலும் ஊருக்கு ஓடிட்டு வந்துடுவேன்’’ என்று உற்சாகத்துடன் கூறுகிறார் சஷ்டிகா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in