ஒரே மாதிரியான உடைகள்: 'தர்பார்' vs 'துப்பாக்கி’ - வைரலாகும் மீம்!

ஒரே மாதிரியான உடைகள்: 'தர்பார்' vs 'துப்பாக்கி’ - வைரலாகும் மீம்!
Updated on
1 min read

ரஜினி மற்றும் விஜய் இருவருமே ஒரே மாதிரியான உடைகள் அணிந்துள்ளதாக, ஒரு மீம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

2012-ம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் 'துப்பாக்கி'. பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்துக்கு கோமல் ஷஹானி மற்றும் எஸ்.ராஜேந்திரன் இருவரும் ஆடை வடிவமைப்பு செய்திருந்தனர். தாணு தயாரித்திருந்தார்.

2018-ம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் 'சர்கார்'. பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்துக்கு தீபாலி நூர் மற்றும் பல்லவி சிங் ஆகிய இருவரும் ஆடை வடிவமைப்பு செய்திருந்தனர்.

அதே போல், இந்த ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் 'தர்பார்'. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ரஜினியின் ஆடைகளை நிஹாரிகா கான் வடிவமைத்துள்ளார்.

இந்த மூன்று படங்களையும் மையப்படுத்தி மீம் ஒன்று வைரலாகி வருகிறது. என்னவென்றால் 'துப்பாக்கி' மற்றும் 'சர்கார்' ஆகிய படங்களில் விஜய் அணிந்திருந்த ஆடைகளின் கலர் ஒற்றுமை மட்டுமன்றி அதைப் போலவே 'தர்பார்' படத்தில் ரஜினியின் ஆடை கலர் ஒற்றுமை அமைந்துள்ளது. இது தெரிந்தே பண்ணப்பட்டதா அல்லது தெரியாமல் பண்ணப்பட்டதா என்று தெரியவில்லை.

இது தொடர்பான மீம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை வைத்து விஜய்யின் ஆடைகளைப் பின்பற்றும் ரஜினி என்று இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் சண்டையிடாமல் இருந்தால் சரிதான்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in