இந்த வருஷம் நாம தெறிக்க வுடறோம்: சந்தானத்துக்கு ராஜேஷ் பிறந்த நாள் வாழ்த்து

இந்த வருஷம் நாம தெறிக்க வுடறோம்: சந்தானத்துக்கு ராஜேஷ் பிறந்த நாள் வாழ்த்து
Updated on
1 min read

இந்த வருஷம் நாம தெறிக்க வுடறோம் என்று நடிகர் சந்தானத்துக்கு இயக்குநர் ராஜேஷ் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காமெடி நடிகரிலிருந்து நாயகனாக மாறியுள்ள சந்தானத்துக்கு இன்று (ஜனவரி 21) பிறந்த நாள். இப்போது எந்தவொரு படத்திலுமே அவர் காமெடியனாக நடிப்பதில்லை. நாயகனாக நடிக்க வரும் வாய்ப்புகளை மட்டுமே ஒப்புக் கொள்கிறார். தற்போது 'சர்வர் சுந்தரம்', 'டகால்டி', 'டிக்கிலோனா' மற்றும் 'ஏ1' இயக்குநரின் அடுத்த படம் என நாயகன் சந்தானம் பயங்கர பிஸி.

காமெடி நடிகராக இருக்கும்போது இயக்குநர் ராஜேஷின் படங்கள் சந்தானத்தை உயர்த்தின. அவரது இயக்கத்தில் வெளியான 'சிவா மனசுல சக்தி', 'பாஸ் (எ) பாஸ்கரன்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி', ’ஆல் இன் ஆல் அழகுராஜா’ மற்றும் 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' ஆகிய படங்களில் சந்தானத்தின் காமெடி பெரும் வரவேற்பைப் பெற்றது.

சந்தானத்தின் பிறந்த நாளை முன்னிட்டு இயக்குநர் ராஜேஷிடம், அவருக்கு ஒரு வாழ்த்துக் கேட்டோம். அதற்கு "SMS டைம்ல இருந்து இப்போ வாட்ஸ் அப் டைம் வரைக்கும் பத்து வருஷமா ரியல் 'நண்பேன்டா'-வா எப்பவும் கூட இருக்கும் என்னோட 'பார்த்தா' சந்தானம் சாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். Happy Birthday குருஜி.. இந்த வருஷம் நாம தெறிக்க வுடறோம்..." என்றார் இயக்குநர் ராஜேஷ்.

இந்த வாழ்த்தை வைத்துப் பார்த்தால், ராஜேஷின் அடுத்த படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கப் பேச்சுவார்த்தை நடந்து வருவதுபோல் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in